சீரக சம்பா அரிசியில் நிறைய அளவுக்கு செலினியம் காணப்படுகிறது. செலினியம் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகும். இது உங்க செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதில் இருந்து காக்கிறது. இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயில் இருந்து காக்கிறது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை தடுக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது.
ஆஸ்துமா அறிகுறிகளில் இருந்து நம்மை தடுக்க உதவுகிறது. இந்த அரிசியில் உள்ள செலினியம் அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து நம்மை காக்க உதவுகிறது. ஆய்வின் படி 200 மைக்ரோ கிராம் செலினியத்தில் 65-80% அளவிற்கு செலினோமெதியோனைன் காணப்படுகிறது. இது புற்றுநோயால் மக்கள் இறப்பதை குறைக்கிறது. குறிப்பாக நுரையீரல், குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் மூலம் இறப்பில் இருந்து நம்மை காக்கிறது.
S108 - Seeragasamba Raw Rice ( சீரக சம்பா அரிசி )
சீரக சம்பா அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்
- சீரக சம்பா அரிசி புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது:
- பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோயிலிருந்து தடுப்பு.
- இதில் நல்ல அளவு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன
- மார்பகப் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மற்றும் இதயத்தை வலிமையாக்கும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் என்ற மற்றொரு நல்ல உறுப்பு இதில் உள்ளது.
- இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது
- இதில் நல்ல நார்ச்சத்து உள்ளது, இது எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து, மனித உடலில் HDL ஐ உயர்த்துகிறது.